வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 12 மே 2019 (10:53 IST)

'அயோக்யா' என் படத்தோட காப்பி: பார்த்திபன் அதிர்ச்சி தகவல்

விஷால், ராஷிகண்ணா, பார்த்திபன், கே.எஸ்.ரவிகுமார் நடிப்பில் இயக்குனர் வெங்கட்மோகன் இயக்கிய 'அயோக்யா' திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த படம் தன்னுடைய 'உள்ளே வெளியே' படத்தின் காப்பி என்று இந்த படத்தில் நடித்துள்ள ஆர்.பார்த்திபன் தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 
 
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், ''அயோக்கியா'த்த்தனம்! 94-ல் வெளியான என் ஜினல் ஜினல் ஒரிஜினல்  'உள்ளே வெளியே'படத்தை அப்படியே லவுட்டி என்னிடம் உரிமை பெறாமல் தெலுங்கில் டெம்பர் என ஹிட் படம் ஆக்கி தமிழிலும் தற்போது! அதில் என்னையும் நடிக்க வைத்து என்ன ஒரு அயோக்கியத்தனம்? குற்ற உணர்ச்சி இல்லாமல் எப்படி? வழக்கு செய்யாமல், பெருமையுடன் பதிவிடுகிறேன் என்று பதிவு செய்துள்ளார்.
 
பார்த்திபனின் 'உள்ளே வெளியே' திரைப்படத்திலும் முதல் பாதியில் போலீசாகி அலப்பரை செய்யும் பார்த்திபன் இரண்டாம் பாதியில் ஒரு தற்கொலையை பார்த்தவுடன் திருந்தி நல்ல போலீஸ் ஆவது போல் கதை அமைக்கப்பட்டிருக்கும். 
 
இருப்பினும் பார்த்திபனின் இந்த டுவீட்டை பார்த்த பலர், 'உங்கள் படத்தின் காப்பி என்று தெரிந்தும் எப்படி நடிக்க ஒப்புக்கொண்டீர்கள் என்றும், இந்த டுவீட்டே நீங்கள் வழக்கு போட்டதற்கு சமம் என்றும், பலர் கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர்.