ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 8 மார்ச் 2024 (12:55 IST)

திரைப்பட வடிவில் ஒளிபரப்பாகும் அயலி வெப் சீரிஸ்… எந்த தொலைக்காட்சியில் தெரியுமா?

இயக்குனர் முத்துக்குமார் இயக்கத்தில் உருவான 'அயலி' என்ற வெப்தொடர் 8 எபிசோடுகளாக ஜி 5 தளத்தில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றது.  இந்த தொடரில் அபி நட்சத்திரா, அனுமோல், அருவி மதன், லிங்கா, சிங்கம்புலி உள்ளிட்ட பலர்  நடித்திருந்தனர்.

வெளியானது முதலே விமர்சன ரீதியாக பாராட்டுகளைக் குவித்துள்ளது இந்த தொடர், மூடநம்பிக்கைக்கு எதிரான கருத்தை ஜனரஞ்சகமாக பேசியிருந்ததால் ரசிகர்களை பெரியளவில் கவர்ந்தது. குறிப்பாக பெண்களை மிக அதிகமாகக் கவர்ந்த ஒன்றாக அமைந்தது. ஜி 5 தளத்தில் தொடர்ந்து 2 வாரங்கள் இந்திய அளவில் ட்ரண்ட்டிங்கில் இடம்பிடித்த முதல் தமிழ் வெப் சீரிஸாக அயலி அமைந்தது.

இந்நிலையில் இப்போது இந்த வெப் சீரிஸை ஒரு திரைப்பட வடிவில் குறுக்கிய ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப உள்ளதாக அறிவித்துள்ளனர். வரும் மார் 10 ஆம் தேதி ஞாயிறு மதியம் 1.30 மணிக்கு அயலி ஒளிபரப்பாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.