வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 21 ஜூலை 2017 (22:14 IST)

ஆகஸ்ட் 10 அஜித்துக்கு, ஆகஸ்ட் 20 விஜய்க்கு!

தல அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதால் தல ரசிகர்கள் அந்த நாளை வெகு உற்சாகத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.



 
 
இந்த நிலையில் ஆகஸ்ட் 10 முடிந்த பத்தே நாளில் விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் ஆரம்பமாகவுள்ளது. ஆம், வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி விஜய்யின் 'மெர்சல்' படத்தின் பாடல்கள் வெளியாகவுள்ளது. பத்து வருடம் கழித்து ஏ.ஆர்.ரஹ்மான், விஜய் படத்திற்காக கம்போஸ் செய்துள்ள பாடல்கள் வெளியாகவுள்ளதால் விஜய் ரசிகர்கள் வெகு ஆர்வத்துடன் ஆகஸ்ட் 20ஆம் தேதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
 
மேலும் இதே ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தனுஷின் 'விஐபி 2' திரைப்படமும் வெளியாகவுள்ளதால் ஆகஸ்ட் கொண்டாட்டத்தில் தனுஷ் ரசிகர்களும் இணையவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.