செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வியாழன், 29 நவம்பர் 2018 (18:24 IST)

2.o திருவிழா தொடங்கியாச்சு! அதிகாலையிலேயே ஆரவாரம் செய்த ரசிகர்கள்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அக்ஷய் குமார் எமிஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 2.o .


இதில் அக்ஷய்குமார் வில்லனாக நடித்துள்ளார். ரஜினிகாந்த் ரோபோ மற்றும் விஞ்ஞானி ஆகிய இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இந்திய சினிமா வரலாற்றில் 500 கோடிக்கும் அதிகமாக செலவு செய்து தயாரிக்கப்பட்ட படம் இதுதான். மிக அதிகப்படியான தொழில்நுட்பங்களும்,  ஹாலிவுட் தரத்துக்கு நிகரான வேலைப்பாடுகளும் இந்த படத்தில் செய்துள்ளார்கள்.

பொதுவாக ஷங்கர் இயக்கும் எந்த படத்திலும் பிரம்மாண்டமான விஷயங்கள் இடம்பெற்று இருக்கும். அந்த வகையில் ரஜினியை வைத்து இயக்கியுள்ள ஷங்கரின் கனவு படமான இதில் மிக அதிகப்படியான பிரம்மாண்டமான விஷயங்கள் இடம்பெற்று இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

இதனை காண மிக ஆவலுடன் ரசிகர்கள் இருக்கிறார்கள். இன்று அதிகாலையிலேயே திரையரங்குகளின் வாசலில் குவிந்துள்ளனர். 2.o முதல் காட்சி இன்று அதிகாலை வெளியானது.  மதுரை, சென்னை , கோவை ,நெல்லை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் 2.o  படத்தை பார்த்து ஆர்ப்பரிப்புடன் ரசித்து வருகிறார்கள். தமிழகம் முழுவதும் திரையரங்குகள் அனைத்தும் இன்று திருவிழா கோலம் பூண்டுள்ளன.