வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (17:08 IST)

நயன்தாரா மற்றும் அவரது காதலருக்கு ’’வாழ்த்துகள்’’ கூறிய அட்லி ! ஏன் தெரியுமா?

ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் கலந்துகொண்டார்.  அப்போது இவர்கள் இணைந்து தயாரித்துள்ள, கூழாங்கல் என்ற படத்திற்கு விருது கிடைத்துள்ளது. இதனால் மொத்தப் படக்குழுவும் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில் இயக்குநர் அட்லி விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்துகள் கூறியுள்ளார்.

 
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை நயன்தாரா. இவரும் இவரது காதலர் விக்னேஷ் சிவன் இணைந்து, கூழாங்கல் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தை வினோத்ராஜ் இயக்குகிறர்.  யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

 
ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் போட்டியிட்ட விக்னேஷ் சிவன், நயன்தாரா தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் ராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு The prestigious award கிடைத்துள்ளதாக விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று தெரிவித்தார்.

மேலும், இந்திய சினிமாக்கள் மட்டுமே இத்திரைப்பட விழாவில் கலந்துகொண்டதாகவும், இதில், கூழாங்கல் திரைப்படம் மட்டுமே விருது வென்றதாகவும். அதுவும் இவ்விருதைப் பெரும் முதல் தமிழ் சினிமா இதுவென்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு, ராஜா ராணி, தெறி. பிகில், மெர்சல் போன்ற படங்களின் இயக்குநர் அட்லி தனது டுவிட்டர் பக்கத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவருக்கும் வாழ்த்துகள் கூறியுள்ளார்.

இந்த ட்வீட்டிற்குப் பதில் டுவீட்டாக நன்றி புரோ என்று விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ள்து குறிப்பிடத்தக்கது.