1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 9 நவம்பர் 2019 (22:09 IST)

மனைவியுடன் இத்தாலி செல்லும் அட்லி!

தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படத்தின் இயக்குநர் அட்லி இந்த படத்தின் வசூல் மட்டும் வெற்றியை உறுதி செய்த பின்னர் தற்போது மனைவியுடன் வெளிநாட்டு சுற்றுப்பயணம் செய்துள்ளார். இத்தாலி நாட்டில் அவர் மனைவியிடம் சுற்றுப்பயணம் செய்துள்ளதாகவும் அங்கு ஒரு சில மாதங்கள் தங்கியிருந்து பின்னர் அவர் சென்னை திரும்ப உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன 
 
மேலும் இத்தாலியில் அவர் தனது மனைவி ப்ரியாவுடன் 5வது திருமண நாளை கொண்டாட இருப்பதாகவும் அவரது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிகில் படத்திற்காக ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைத்து, மனைவியுடன் நேரத்தை செலவு செய்ய முடியாமல் இருந்த அட்லி, தற்போது பிகில் படத்தின் டென்ஷன் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில் மனைவியுடன் சுற்றுலா செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த சுற்றுலா முடிந்து சென்னை திரும்பிய பிறகு அவர் தன் அடுத்த படம் குறித்த ஆலோசனையில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது. அட்லியின் அடுத்த படம் தெலுங்கு படம் ஒன்று அல்லது ஷாருக்கான் நடிக்கும் இந்திப் படம் ஆகிய இரண்டு படங்களில் ஏதாவது ஒரு படத்தை அவர் அடுத்ததாக இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது