செவ்வாய், 11 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 1 பிப்ரவரி 2021 (10:38 IST)

மாஸ்டர் படத்தைக் கண்டுகொள்ளாத விஜய்யின் நெருக்கமான இயக்குனர்!

மாஸ்டர் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில் விஜய்யின் நெருங்கிய இயக்குனர்களில் ஒருவரான அட்லி அந்த படத்துக்கு வாழ்த்து தெரிவிக்காதது சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

மாஸ்டர் திரைப்படம் 50 சதவீத இருக்கைகளோடு வெளியான நிலையில் பெரும்பாலான திரையரங்குகள் அந்த விதியைக் கடைபிடிக்காமலும் அதிக விலைக்கு டிக்கெட்களை விற்றும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. ஆனால் சில நாட்கள் கூட்டத்துக்கு படத்துக்கு மிகப்பெரிய அளவில் ஆதரவு இல்லை என்றும் ஓடாத படத்தை ஓடியதாக பொய்க் கணக்கு காட்டுவதாகவும் சிலர் கிண்டல் செய்தும் வருகின்றனர். ஆனாலும் எப்படி பார்த்தாலும் திரையரங்குகளுக்கு மாஸ்டர் திரைப்படம் உயிர்க்கொடுத்துள்ளது உண்மைதான் என திரைவட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கோலிவுட்டின் முக்கியக் கலைஞர்கள் பெரும்பாலோனவர்கள் மாஸ்டர் திரைப்படத்தைப் பார்த்து புகழ்ந்து பேசி வரும் நிலையில் விஜய்யை வைத்து 3 திரைப்படங்களை இயக்கி விஜய்க்கு நெருக்கமான இயக்குனராக அறியப்படும் அட்லி இதுவரை அதுபற்றி ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை என்பது விஜய் ரசிகர்களுக்கே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.