’பிகில்’ படத்தில் நயன்தாராவை டம்மியாக்கிவிட்டாரா அட்லி?

Last Modified செவ்வாய், 8 அக்டோபர் 2019 (18:24 IST)
விஜய், நயன்தாரா நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள ’பிகில்’ திரைப்படம் வரும் தீபாவளி விருந்தாக வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் இம்மாதம் 12ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் ட்ரைலர் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் இந்த ட்ரைலரை சிறப்பாக வரவேற்க விஜய் ரசிகர்கள் தீவிரமாக திட்டமிட்டுள்ளனர். இதனை அடுத்து சற்றுமுன் இயக்குனர் அட்லி தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் மற்றும் நயன்தாரா இருக்கும் அட்டகாசமான போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்

இந்த போஸ்டருக்கு லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருவது மட்டுமின்றி இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் அட்லீ, நயன்தாரா கேரக்டரை டம்மியாகி விட்டதாக கூறப்படும் நிலையில் நயன்தாராவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இந்த போஸ்டரை அவர் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :