ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 13 ஜூலை 2023 (07:43 IST)

“நான் கண்ட கனவில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்…” ஷாருக் கானுக்கு நன்றி தெரிவித்த் அட்லி!

பாலிவுட்  சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான ஷாருக்கான் நடிப்பில் தமிழ் இயக்குனர் அட்லி இயக்கும் ஜவான் திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த படத்தில் தமிழ் நடிகர்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படம் செப்டம்பர் 7 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதையடுத்து இப்போது படத்தின் பிஸ்னஸ் மற்றும் ப்ரமோஷன் பணிகள் தொடங்கியுள்ளன. இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் பிரிவியூ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இதையடுத்து நடிகர் ஷாருக் கான் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அட்லியைப் பாராட்டி ட்வீட் செய்திருந்தார். அந்த ட்வீட்டை பகிர்ந்த அட்லி “ராஜாக்களின் கதைகளைக் கேட்டு வளர்ந்த நான் நிஜத்தில் அப்படியான ஒருவரோடு பயணம் செய்வது என நான் கனவு கண்ட வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன்.  இந்த பயணத்தில் விலைமதிப்பில்லாத அனுபவங்களை பெற்று வருகிறேன்.  சினிமா மீதான உங்கள் காதலும், கடின உழைப்பும் கடந்த 3 வருடங்களாக எனக்கு உத்வேகத்தை அளித்து வருகிறது. ” என நெகிழ்ச்சியாக ட்வீட் செய்துள்ளார்.