காக்கிச் சட்டை அணியும் அதர்வா
புதிதாக நடிக்க இருக்கும் படத்தில், காக்கிச்சட்டை அணிந்து போலீஸாக நடிக்கப் போகிறாராம் அதர்வா.
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘டார்லிங்’, ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படங்களை இயக்கிய சாம் ஆண்டன், அடுத்ததாக அதர்வாவை இயக்க இருக்கிறார். இந்தப் படத்தை, மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார். “ஆறு மாதத்தில் இந்தப் படத்துக்கான ஸ்கிரிப்ட்டை எழுதி முடித்துவிட்டேன். இந்தப் படத்தில், அதர்வா போலீஸாக நடிக்கிறார். என்னுடைய ஸ்கிரிப்ட்டுக்கு, இளமையான, ஃபிட் பாடி கொண்ட ஒரு ஹீரோ தேவைப்பட்டார். அதர்வா ஃபிட் பாடியை மெயிண்டெய்ன் செய்து வந்ததால், அவரைத் தேர்வு செய்தேன்” என்கிறார் சாம் ஆண்டன்.
கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த இந்தப் படத்தில், சமூகத்துக்கு கருத்தும் சொல்லப் போகிறார்களாம். ஆகஸ்ட் மாதம் தொடங்கும் படப்பிடிப்பு, சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடக்க இருக்கிறது. யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஹீரோயின் உள்ளிட்ட மற்ற நடிகர்கள், ஜூலை மாத இறுதிக்குள் முடிவு செய்யப்படுவார்களாம்.