வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Updated : சனி, 17 ஜூன் 2017 (13:46 IST)

இந்த வயதிலா திருமணம் செய்துகொள்ளப் போகிறார் ஷோபனா?

திருமணமே வேண்டாம் என்று மறுத்த ஷோபனா, 47 வயதில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.


 

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ஷோபனா. ஆரம்பத்தில் மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்துவந்த ஷோபனா, கமல் நடித்த ‘எனக்குள் ஒருவன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான தமிழ்ப் படம் ‘கோச்சடையான்’. மிகச்சிறந்த பரதநாட்டியக் கலைஞரான ஷோபனா, தென்னிந்திய மொழிகள் தவிர்த்து ஹிந்திப் படங்களிலும் நடித்துள்ளார்.

திருமணமே வேண்டாம் என்று கூறி, அனந்த நாராயிணி என்ற பெண்ணை தத்தெடுத்து வளர்த்து வந்தார். தற்போது ஷோபனாவுக்கு 47 வயதாகிறது. இந்நிலையில், உறவுக்காரரும், நீண்ட நாள் நண்பருமான ஒருவரைத் திருமணம் செய்ய ஷோபனா முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.