Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அஜித்திடம் கால்ஷீட் கேட்ட ‘விவேகம்’ தயாரிப்பாளர்

Cauveri Manickam (Sasi)| Last Modified திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (11:18 IST)
‘விவேகம்’ படத்தைத் தயாரித்துள்ள சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம், மறுபடியும் அஜித்திடம் கால்ஷீட் கேட்டுள்ளதாம்.

 
 
சிவா – அஜித் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் ‘விவேகம்’. காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப்  படத்தில், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இந்தப்  படத்தை, சத்யஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கிறார்.
 
கடந்த வருடம் ‘தொடரி’, இந்த வருடம் ‘சத்ரியன்’ என இரண்டு பிளாப் படங்களை அடுத்தடுத்து இந்த நிறுவனம்  தயாரித்தது. எனவே, ‘விவேகம்’ மட்டும்தான் இவர்களுக்கு லாபத்தை சம்பாதித்துக் கொடுக்கும் ஒரே படம். ஆனாலும், இந்த  ஒரு படத்தின் மூலம் மட்டுமே அவர்களால் நஷ்டத்தை ஈடுகட்ட முடியாது. எனவே, அதிலிருந்து மீள மறுபடியும் அஜித்திடன்  கால்ஷீட் கேட்டிருக்கிறார்களாம்.இதில் மேலும் படிக்கவும் :