வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 7 ஜனவரி 2019 (11:09 IST)

ஆர்யாவுக்கு டும் டும் டும் – பொண்ணு யாரு தெரியுமா ?

நடிகர் ஆர்யாவும் பிரபல நடிகை ஒருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் இரு வீட்டார் சம்மதத்துடன் அவர்களின் திருமணம் நடக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக கடந்த சில ஆண்டுகளாக வலம் வந்து கொண்டிருந்தார். அவர் மீது ஒருதலையாகக் காதல் பித்து கொண்ட பெண் ரசிகைகளுக்கு கல்யாணம் ஆகி அவர்களின் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்து விட்டனர். ஆனால் இன்னமும் ஆர்யா தன்னை ஒரு சாக்லேட் பாயாகவே நினைத்து சுற்றி வந்துகொண்டிருந்தார்.

இதற்கிடையில் ஆர்யாவின் சாக்லேட்பாய் இமேஜைப் பயன்படுத்தி அவருக்குப் பெண் பார்ப்பது போல ஒரு தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று பெண்களை அழைத்துவந்து சுயம்வரம் போல நிகழ்ச்சி ஒன்றை நடத்தி டி.ஆர். பி. –யை ஏற்றிக்கொள்ளப் பார்த்தது. ஆனால் அதுவும் எதிர்பார்த்த அளவு போகாமல் பிளாப் ஆனது.

இப்போது ஆர்யாவும் பெரிதாகப் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் உள்ளார். ஆர்யா கையில் தற்போது அவர்  கதாநாயகனாக நடிக்கும் மகாமுனி என்றப் படம் மட்டுமே உள்ளது. இது தவிர, சூர்யா கே. வி ஆனந்த் கூட்டணியில் உருவாகி வரும் காப்பான் ஒரு படத்தில் துணைக்கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடைபெற்று வந்த போது அந்த படத்தின் கதாநாயகி சாயிஷா சாகல்க்கும் ஆர்யாவுக்கும் இடையில் நட்பு உருவாகி அது இப்போது காதலாக மலர்ந்துள்ளதாக செய்திகள் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன. இந்தக் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் சொல்லி விட்டதாகவும் விரைவில் இவர்கள் இருவரின் திருமண செய்தி வெளியாகும் என்பதுதான் இப்போதையக் கோலிவுட் ஹாட் நியூஸ்.