வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 19 டிசம்பர் 2014 (15:20 IST)

ஹெலிகாப்டர் காட்சியுடன் முடிந்த புறம்போக்கு

எஸ்.பி.ஜனநாதன் இயக்கியிருக்கும் புறம்போக்கு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நேற்று பெங்களூருவில் நடந்தது. சில முக்கியமான காட்சிகளை நேற்று படமாக்கியதுடன் மொத்த படப்பிடிப்பும் முடிவுக்கு வந்தது.
 
யுடிவியுடன் இணைந்து ஜனநாதன் புறம்போக்கை தயாரிக்கிறார். ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா நாயர் நடித்துள்ள இந்தப் படத்தின் கடைசிநாள் படப்பிடிப்பு நேற்று பெங்களூருவில் நடந்தது. நேற்று நடந்த படப்பிடிப்பில் ஹெலிகாப்டரில் நடக்கும் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டதாக படயூனிட் தெரிவித்துள்ளது.
 
நேற்றுடன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் ஆரம்பித்துள்ளன. ஜனவரி முதல் வாரத்தில் பாடல்களை வெளியிடுகின்றனர். அறிமுக இசையமைப்பாளர் சதீஷ் வர்ஷன் இசையமைத்துள்ளார். ஃபெப்ரவரியில் படம் திரைக்கு வருகிறது.