மெட்ரோ ரயிலில் பயணம் செய்த ஆர்யா

Cauveri Manickam| Last Modified வியாழன், 18 மே 2017 (15:25 IST)
மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையில் பயணம் செய்து மகிழ்ந்துள்ளார் நடிகர் ஆர்யா.

 
கோயம்பேடு முதல் நேரு பார்க் வரையிலான, மெட்ரோ சுரங்க ரயில் சேவை சமீபத்தில் தொடங்கப்பட்டது. இந்த ரயிலில் சில நாட்களுக்கு முன்பு பயணம் செய்துள்ளார் ஆர்யா. அண்ணா நகரில், ஆர்யாவின் வீட்டருகில்தான் இந்த மெட்ரோ ரயில்  செல்கிறது.
 
தன்னுடைய சைக்கிளிங் நண்பர்களான விஜய் குமார், நாகா, பிரபின், ரவி மற்றும் மதன் ஆகியோர்களுடன் மெட்ரோ ரயிலில்  பயணம் செய்துள்ளார் ஆர்யா. “எப்போதும் அதிகாலை 4 மணிக்கு சைக்கிளில் ரைடு போக அழைக்கும் ஆர்யா,  முதன்முறையாக மதிய நேரத்தில் ரைடு போக அழைத்தார்” என்று கிண்டலடித்துள்ளார் நாகா.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :