செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 23 பிப்ரவரி 2017 (12:18 IST)

அரவிந்த்சாமி ஜோடியான அமலா பால்

விவாகரத்துக்குப் பிறகு அமலா பாலின் காட்டில் நல்ல மழை. கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம் என்று சுற்றிச் சுழன்று  அடிக்கிறார்.

 
மலையாளத்தில் மம்முட்டி, நயன்தாரா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம், பாஸ்கர் தி ராஸ்கல். இதன் தமிழ் ரீமேக்கில்  ரஜினி நடிக்கக்கூடும் என்று பேசப்பட்டது. தற்போது அரவிந்த்சாமி நடிக்கிறார். நயன்தாரா நடித்த வேடத்தில், அமலா பால்.
 
மலையாளப் படத்தை இயக்கிய சித்திக்கே இந்தப் படத்தையும் இயக்குகிறார். மலையாளப் படத்தை அப்படியே ரீமேக்  செய்யாமல், தமிழ் ரசிகர்களுக்கும் பண்பாட்டுக்கும் தக்கபடி பல மாற்றங்களை செய்யவிருப்பதாக சித்திக் கூறியுள்ளார்.