1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: வியாழன், 21 ஏப்ரல் 2022 (12:39 IST)

ஹாலிவுட் தரத்தில் வரவிருக்கும் அரவிந்த் சாமியின் " கள்ளபார்ட் "

விக்ரம் தமன்னா நடிப்பில் உருவாகி வெற்றிபெற்ற ஸ்கெட்ச் படத்தை தயாரித்த மூவிங் பிரேம்ஸ் படநிறுவனம் தற்போது அரவிந்த்சாமி ரெஜினா நடித்துள்ள " கள்ளபார்ட் " படத்தை மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ளது.

இப்படம் ஹாலிவுட் தரத்தில் உருவாகி வருவதால் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்புகள் கிடைத்துள்ளது. 
 
என்னமோ நடக்குது, அச்சமின்றி போன்ற படங்களை இயக்கிய ராஜபாண்டி இந்த படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகனாக அரவிந்த்சாமி நடித்துள்ளார் கதாநாயகியாக ரெஜினா கசாண்ட்ரா நடித்துள்ளார்.