Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிரபாஸுக்கு வில்லனா அருண் விஜய்?

Cauveri Manickam (Sasi)| Last Modified சனி, 29 ஜூலை 2017 (10:26 IST)
பிரபாஸ் நடிக்கும் ‘சாஹு’ படத்தில், அருண் விஜய் நடிக்கவுள்ளார்.

 
 
எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடிப்பில் வெளியான படம் ‘பாகுபலி’. இந்தப்  படத்தின் பிரமாண்ட வெற்றியால், உலகம் முழுவதும் தெரிந்தவராகி விட்டார் பிரபாஸ். இவர் அடுத்ததாக நடிக்கும் படம்  ‘சாஹு’. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் உருவாகும் இதில், அனுஷ்கா ஹீரோயினாக நடிப்பதாக கூறப்படுகிறது.
 
‘கத்தி’ படத்தில் வில்லனாக நடித்த நீல் நிதின் முகேஷ், பிரபாஸுக்கு வில்லனாக நடிக்கிறார். இந்நிலையில், அருண்  விஜய்யும் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். அவர் வில்லனாக நடிக்கிறாரா அல்லது வேறேனும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறாரா என்பது தெரியவில்லை. தற்போது மகிழ் திருமேனி இயக்கிவரும் ‘தடம்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்  அருண் விஜய். விரைவில் அவர் ‘சாஹு’ ஷூட்டிங்கில் கலந்துகொள்ள இருக்கிறார் என்கிறார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :