1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 4 மார்ச் 2024 (14:27 IST)

அவர் இயக்கத்தில் நடிப்பது 100 படங்களில் நடிப்பதற்கு சமம்- அருண் விஜய் பெருமிதம்!

அருண் விஜய் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் இப்போது முக்கிய வேடத்தில் நடிக்க சமுத்திரக்கனி மற்றும் மிஷ்கின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்போது வணங்கான் படத்தை இயக்குனர் பாலா மற்றும் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இப்போது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. வசனங்கள் இன்றி விறுவிறுப்பான காட்சிகளோடு உருவாக்கப்பட்டுள்ள இந்த டீசர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. சில தினங்களுக்கு முன்னர் வெளியான இந்த டீசர் இதுவரை 8 மில்லியன் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு வணங்கான் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை காட்டுகிறது. 

இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு மீதமுள்ள நிலையில் அருண் விஜய்க்கு ஏற்பட்ட ஒரு விபத்து காரணமாக தற்போது ஒரு இடைவெளி விடப்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிப்பது பற்றி பேசியுள்ள அருண் விஜய் “அவர் படத்தில் நடிப்பது எளிதல்ல. ஆனால் அவர் இயக்கத்தில் நடிப்பத் 100 படங்களில் நடிப்பதற்கு சமம்” எனக் கூறியுள்ளார்.