திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 13 ஜூன் 2020 (10:04 IST)

வனிதா அக்கா மட்டும் மிஸ்ஸிங்: அருண் விஜய் ப்ரோ... நீங்க ரொம்ப மோசம்!

தமிழ் சினிமாவின் பெயர்போன நட்சத்திர குடும்பங்களில் ஒன்று விஜயகுமாரின் குடும்பம் பழமைவாய்ந்த மிகச்சிறந்த குடும்பம். நடிகர் விஜயகுமாருக்கு வனிதா, ப்ரீதா, ஸ்ரீ தேவி என்ற மூன்று மகள்கள் மற்றும் அருண் விஜய் என அவரது குடும்பத்தில்     உள்ள அனைவரும் பிரபலங்கள் தான்.

சினிமா துறையில் சிறந்து விளங்கிய குடும்பத்தில் இருந்து பிறந்து வளர்ந்தாலும் தனது சொந்த முயற்சியால் 22 ஆண்டுகளுக்கு மேல் உழைத்து முன்னுக்கு வந்துள்ளார் அருண் விஜய். இவரை ஹீரோவாக திரையில் கண்டு ரசிக்கும் ரசிகர்களை விட வில்லனாக ரசிக்கும் ரசிகர்களே அதிகம்.

இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்து வரும் அருண் விஜய் பல பழைய நினைவுகளை தூசிதட்டி நினைவுபடுத்தி வருகிறார். அந்தவகையில் அண்மையில் என்னை அறிந்தால் படத்தின் ஷூட்டிங் சமயத்தில் அஜித்துடன் எடுத்துக்கொண்ட குரூப் போட்டோ ஒன்றை வெளியிட்டருந்தார். இந்நிலையில் தற்போது தனது அப்பா , அக்கா,  குழந்தைகள் என குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட அழகிய போட்டோவை வெளியிட்டுள்ளார். இதனை கண்ட இணையவாசிகள் வனிதா அக்கா எங்க ப்ரோ... அவங்க மட்டும் மிஸ்ஸிங்... இதெல்லாம் ரொம்ப பாவம் ப்ரோ என கமெண்ட் செய்து வருகின்றனர்.