அருண் விஜய்யின் குற்றம் 23 ரிலீஸ் தேதி அறிவிப்பு

Sasikala| Last Modified வியாழன், 2 பிப்ரவரி 2017 (18:08 IST)
அருண் விஜய், மகிமா நம்பியார் நடித்துள்ள குற்றம் 23 படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர்.

 
என்னை அறிந்தால் படத்துக்குப் பிறகு ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று பிடிவாதமாக இருந்து அருண் விஜய் நடித்த படம்,  குற்றம் 23. அறிவழகன் இயக்கியிருக்கும் இந்தப் படம் மருத்துவ உலகின் குற்றங்களை வெளிச்சமிட்டு காட்டுகிறது.
 
க்ரைம் த்ரில்லராக உருவாகியிருக்கும் இந்தப் படத்தைதான் அருண் விஜய் அதிகம் எதிர்பார்க்கிறார். விஷால் சந்திரசேகர்  படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை மார்ச் 2 வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
 
மார்ச் 2 அருண் விஜய்யின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :