திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 19 அக்டோபர் 2021 (20:25 IST)

அருண்விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் பிரபல இயக்குனர்

பிரபல நடிகர் அருண் விஜய் தற்போது பார்டர், அக்னி சிறகுகள், யானை உள்பட 5 திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்களின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த ஆண்டும் இந்த ஆண்டும் அவர் நடித்து முடித்துள்ள திரைப்படங்கள் வரிசையாக வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது/ குறிப்பாக ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்துவரும் யானை திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பிரபல இயக்குனர் சுசீந்திரன் இயக்கும் அடுத்த படத்தில் அருண் விஜய் நடிக்க உள்ளதாகவும் இது குறித்து பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
சுசீந்திரன், அருண் விஜய் முதல் முறையாக இணையும் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது