பாகுபலி பிரபாஸ் அடுத்த படத்தில் அருண்விஜய்

prabhas arun" width="600" />
sivalingam| Last Modified திங்கள், 31 ஜூலை 2017 (06:38 IST)
பாகுபலி, பாகுபலி 2 ஆகிய இரண்டே படத்தில் உலகப்புகழ் பெற்ற பிரபாஸ் அடுத்து நடித்து வரும் படம் 'சாஹோ. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.


 
 
இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் அருண்விஜய் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 'என்னை அறிந்தால்' படத்தில் அஜித்துக்கு சவால் விட்டு மோதிய அருண்விஜய், இந்த படத்தில் பிரபாசுக்கு வில்லனாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
 
'என்னை அறிந்தால்' படம் போலவே இந்த படமும் தனக்கு நல்ல பெயர் வாங்கி தரும் என்றும் பிரபாசுடன் நடிப்பது வித்தியாசமான அனுபவம் என்றும் அருண்விஜய் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :