ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 23 மே 2023 (14:12 IST)

இனிமேல் நான் டெர்மினேட்டர் இல்லை… விலகிய அர்னால்ட்!

ஹாலிவுட் சினிமாவில் டெர்மினேட்டர், ப்ரிடேட்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து உலக புகழ் பெற்றவர் அர்னால்ட் ஸ்வாஸ்னேகர். ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் இவர் நடித்த டெர்மினேட்டர் படத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். முன்னாள் மேயராகவும் இருந்த அர்னால்ட் தற்போது லாஸ் ஏஞ்சல்ஸில் வாழ்ந்து வருகிறார்.

இவரை ஹாலிவுட்டின் மிகப்பெரிய ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றியதில் 1984 ஆம் ஆண்டு வெளியான டெர்மினேட்டர் படத்துக்கு முக்கிய இடமுண்டு. அதன் பிறகு டெர்மினேட்டர் சீரிஸ் படங்கள் சில படங்கள் தவிர்த்து அனைத்திலும் அவர் நடித்தார். இந்நிலையில் கடைசி சில பாகங்கள் பெரியளவில் வெற்றி பெறவில்லை. அதனால் இப்போது டெர்மினேட்டர் படங்களில் இருந்து தான் விலகுவதாக அர்னால்ட் தெரிவித்துள்ளார்.