வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 27 அக்டோபர் 2023 (20:16 IST)

அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா- உமாபதி நிச்சயதார்த்தம்

arjun daughter
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அர்ஜுன்.இவர், முதல்வன், துரை, மங்காத்தா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் கிங்காக வலம் வரும் இவர் சமீபத்தில் நடிகர் விஜயுடன் இணைந்து லியோ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், அவரது மூத்த மகளான ஐஸ்வர்யா பட்டத்து யானை படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.

எனவே  நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியோடுதான் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடக்கவிருப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், இன்று அர்ஜூன் மகள் ஐஸ்வர்யாவுக்கும், தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களுக்கு சினிமாத்துறையினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.