திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 1 ஜனவரி 2023 (12:54 IST)

’அர்ஜுன் ரெட்டி’ இயக்குனரின் அடுத்த படம்: டைட்டிலுடன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்!

’அர்ஜுன் ரெட்டி’ இயக்குனரின் அடுத்த படம்: டைட்டிலுடன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்!
விஜய் தேவரகொண்டா நடித்த ’அர்ஜுன் ரெட்டி’ என்ற படத்தை இயக்கிய இயக்குனரின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது
 
2017 ஆம் ஆண்டு விஜய்தேவரகொண்டா நடித்த அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் தமிழில் துரு விக்ரம் நடித்த ’ஆதித்ய வர்மா’ என்ற பெயரில் வெளியானது என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா என்பவர் தற்போது அடுத்த படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்திற்கு ’அனிமல் ’என பெயரிடப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
ரத்தம் வடிய வடிய கையில் சிகரெட் பிடிக்கும் அட்டகாசமான போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என 5 மொழிகளில் இந்த படம் தயாராகி வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
 
Edited by Siva