திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Updated : செவ்வாய், 6 ஜூன் 2023 (09:46 IST)

தல அஜித்துக்கு வில்லனாகும் கைதி நடிகர்?- விடாமுயற்சி லேட்டஸ்ட் அப்டேட்!

துணிவு படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் விடாமுயற்சு திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் இன்னும் அடுத்த கட்ட பணிகள் நடக்கவில்லை. ஷூட்டிங் எப்போது என்பதும் தெரியவில்லை.

இந்நிலையில் விரைவில் ஷூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் படத்தின் லொகேஷன் தேடுதலுக்காக அஜித்தும் மகிழ் திருமேனியும் இப்போது லண்டனில் முகாமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அவர்கள் சென்னை திரும்பியதும் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் பல்வேறு நாடுகளில் படமாக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தில் நடிக்கப் போகும் நடிகர் நடிகைகள் பற்றிய தகவல்கள் இப்போது வெளியாகி வருகின்றன. படத்தில் திரிஷாதான் கதாநாயகி என்று உறுதியாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. அதே போல வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க கைதி, மாஸ்டர் படங்களில் நடித்த அர்ஜுன் தாஸிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.