ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 18 நவம்பர் 2023 (07:45 IST)

கலைஞர் 100 நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்களா விஜய் & அஜித்?

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கலைஞர் 100 என்ற விழா ஒன்றை தமிழ் சினிமாக் காரர்கள் விரைவில் எடுக்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமல் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இந்த நிகழ்ச்சியில் விஜய் மற்றும் அஜித் ஆகியோர் கலந்து கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறார்களாம்.

ஆனால் கடந்த பல ஆண்டுகளாகவே அஜித், இதுபோன்ற பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. விஜய்யும் விரைவில் அரசியலில் இறங்க உள்ளதாக சொல்லப்படும் நிலையில் அவரும் வருவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் விஜய் மற்றும் அஜித் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.