1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: வியாழன், 23 ஜூன் 2016 (16:36 IST)

திருமணத்திற்கு முன்னரே குடும்பம் நடத்தும் நடிகை சமந்தா?

பிரபல நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக உள்ளார். இவர் தான் திருமணம் செய்யவிருக்கும் நடிகர் நாக சைதன்யாவுடன் ஒரே வீட்டில் வசித்து வருவதாக வீடியோ ஒன்று வலம் வருகிறது.


 
 
நடிகை சமந்தா தான் ஒரு நடிகரை காதலித்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்யவிருப்பதாகவும் கூறினார். பின்னர் அந்த நடிகர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யா என்பது தெரியவந்தது.
 
இவர்கள் இருவரின் திருமணம் அடுத்த வருடம் தொடக்கத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சமந்தாவும், நாக சைதன்யாவும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்வது போன்ற வீடியோ ஒன்று இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

நன்றி: Newstamil
 
ஒரு அடுக்குமாடி வீட்டின் பால்கனியில் இருவரும் ஜோடியாக உலவும் இந்த வீடியோ படத்தை பார்த்து சமந்தாவும் நாக சைதன்யாவும் அதிர்ச்சியாகி உள்ளனர். இருவாரும் மிக ஆழமாக காதலிப்பதால் பிரிய மனமில்லாமல் ஒரே வீட்டில் வசிப்பதாக பேசப்படுகிறது. சினிமாவில் இதெல்லாம் சாதாரணமப்பா.