பிகில் படத்தின் பொக்கிஷ புகைப்படத்துடன் ட்ரைலர் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!
தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் பிகில். இப்படத்தில், விஜய் அப்பா – மகன் என்று இரு வேடங்களில் நடித்துள்ளார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். உடன் யோகி பாபு, கதிர், விவேக், இந்துஜா, ஜாக்கி ஷரூப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா, தேவதர்ஷினி, ரெபா மோகா ஜான், வர்ஷா போலம்மா, ஐஎம் விஜயன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
வருகிற தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரைலர் நாளை மாலை 6 மணியளவில் வெளியாகவுள்ளது. படத்தின் வெளியீட்டை திருவிழா போன்று கொண்டாடி தீர்க்கவேண்டும் என விஜய் ரசிகர்கள் வெறித்தனமான வெய்ட்டிங்கில் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தற்போது இப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் #Bigil #Memories என குறிப்பிட்டு பிகில் படத்தின் பூஜை இன்று தான் போடப்பட்டது என குறிப்பிட்டு அந்த பொக்கிஷமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அத்தோடு விட்டு வைக்காமல் தனது ட்விட்டர் பக்கத்தில் நான் நினைக்கிறன், நாளை வரை உங்களால் பிகில் ட்ரைலரை பார்க்க காத்திருக்க முடியாது என்று...பிகில் டிரைலர் எத்தனை நிமிடம் தெரியுமா..? ஏதேனும் யூகங்கள் உள்ளதா? #Bigil ஹேப்பி மார்னிங் என குறிப்பிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளார்.