சூப்பர் ஸ்டாருடன் மோதும் அரவிந்த் சாமி
தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் மகேஷ் பாபு. இவரது படங்கள் சூப்பர் ஹிட்டுகளாகி ரசிகர்களுக்கு விருந்து படைக்கும்.
இந்நிலையில், சர்காரு வாரி பட்டா என்ற படத்தில் மகேஷ் பாபு நடிக்கவுள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இயக்குநர் பரசுராம் இயக்கும் இப்படத்தில் ஹீரோவுக்கு இணையான வில்லன் கதாப்பாத்திரத்தை வடிவமைத்துள்ளதாகவும், இதில் நடிகர் அரவிந்த் சாமியை படக்குழு தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.