1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 27 மார்ச் 2015 (13:18 IST)

அம்பது பர்சன்டேஜ் அழகிய காதலுடன் தயராகும் அராத்து

மார்க்கெட் நிலவரம் டல்லடித்தால் நடிகைகள் செய்யும் முதல்வேலை பெயரை மாற்றுவது. அதேபோல் ஒரு படம் அதிக நாள் தயாரிப்பில் இருந்தால், அதனை வெளியிடும் போது பெயரை மாற்றி புதிய படம் போல் வெளியிடுவார்கள்.
 
இதேபோன்ற நிலைமை இயக்குனர்களுக்கும் எப்போதாவது ஏற்படும். 
 
ப்ரியமுடன், யூத், ஜித்தன் உள்பட பல படங்களை இயக்கியவர் வின்சென்ட் செல்வா. இடையில் காணாமல் போன இவர், தனது பெயரை ப்ரியமுடன் ஷெல்வா என்று மாற்றி திரும்பி வந்திருக்கிறார். இந்தப் புதுப்பெயருடன் அவர் இயக்கும் படம், அராத்து.
 
படம் பற்றி சுறிய ஷெல்வா,
 
உண்மை சம்பவங்களின் அடிப்படையில் வடசென்னையை களமாகக் கொண்டது இப்படம். கதையின் யதார்த்தம் குறையாமல் எடுக்க திட்டமிட்டுள்ளோம். அழகிய காதலையும், முரட்டு தனத்தையும் முறையே சரிசமமாக கொண்டதுதான் அராத்து.
 
படத்திற்கு புத்துணர்வு தரும் வகையில் விஜய் கார்த்திக், சம்பி ஆகிய புதுமுகங்களை அறிமுகம் செய்துள்ளோம். ‘டங்கா மாரி’ புகழ் விஜி இரண்டு பாடல்களை எழுதி பாடுகிறார். ‘அராத்து’ கதைக்கான வடசென்னையை நாங்களே வடிவமைத்து செட் அமைத்துள்ளோம். இது கதைக்கு மேலும் வலு சேர்க்கும் என்றார்.