திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : சனி, 2 மே 2020 (22:09 IST)

ஏ.ஆர்.ரஹ்மானின் கொரோனா பாடல்… ஒரு ஷேர் செய்தால் ரூ. 500 நிதி …

ஆஸ்கார் நாயகன், இசையமைப்பாளர் ஹிந்தி பாடலாசிரியர் ப்ரஸூன் ஜோஷியுடன் இணைந்து கொரோனா வைரஸுக்கு எதிரான ஒரு பாடலை உருவாக்கியுள்ளார்.

அப்பாடல் சேர்ந்தே மீள்வோம் என்று தொடங்குகிறது… ஏ.ஆர்.ரஹ்மான் இப்பாடலுக்கு இசையமைத்திருப்பதுடன், பாடலும் பாடியுள்ளார். அவருடன் ஸ்ருதிஹாசன், சித் ஸ்ரீராம், நீதி மோகன், ஜாவே அலி, சாஹா, அபய் ஜோத்ரர்கர், சாஷா திருபாதி , கதீஜா ரஹ்மான் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளதாவது : கொரோனாவுக்கு எதிராக தேச மக்கள் ஒன்றிணைய உந்துததலாக இப்பாடல் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும், இப்பாடலை HDFC வாங்கி வெளியிட்டுள்ளது. இப்பாடலை ஷேர் செய்தால் ஒரு பாடலுக்கு ரூ.500 பிரதமரின் கொரொனா நிதிக்குச் சேரும் வகையில்  இவ்வங்கி அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.