வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: செவ்வாய், 20 மே 2014 (11:50 IST)

ஏ.ஆர்.ரகுமான் வீடு மீது தாக்குதல்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்து வருவதால்... சென்னை மட்டுமல்லாமல், அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ்சில் ஒரு வீடு இருக்கிறது.
 இந்த வீட்டின் மீதுதான் சில மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இந்த தாக்குதல் என்ன காரணத்திற்காக நடந்தது என்று தெரியவில்லை. 
 
மர்ம நபர்கள் சுவற்றில் சரியாக படிக்க முடியாத அளவுக்கு ஏதோ கிறுக்கலாக எழுதி வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள். இதை தனது டுவிட்டரில், தாக்குதலுக்கு உண்டான வீட்டின் பகுதிகளை படம் பிடித்து வெளியிட்டிருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். 
 
வரும் வெள்ளிக்கிழமை அவர் இசையமைத்த படமான ‘மில்லியன் டாலர் ஆர்ம்’ படம் வெளியாகவுள்ள சமயத்தில் இது போன்ற தாக்குதல் மர்மமாக இருக்கிறது. இது பற்றிய உண்மைகள் போலீஸ் விசாரணையில்தான் முழுமையாக தெரியவரும். இந்த படத்தில்தான் தமிழ் பாடல் ஒன்று இடம் பெறுகிறது.