வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : ஞாயிறு, 10 செப்டம்பர் 2023 (13:30 IST)

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி... டிராபிக் போலீஸார் அறிவுறுத்தல்

இந்திய சினிமாவின் முன்னணி  இசையமைப்பாளர் .ஆர்.ரஹ்மான். இவர்தமிழ்இந்தி மற்றும் ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

சமீபத்தில், இவர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 1-2 ஆகிய படங்களுக்கு இசையமைத்திருந்தார். இது பெரும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, சமீபத்தில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்த மாமன்னன் படத்திற்கு இசையமைத்திருந்தார்.  

இந்த நிலையில்,  சமீபத்தில் சென்னை பனையூரில்  ஏ.ஆர்.ரஹ்மான் ''மறக்குமா நெஞ்சம்'' என்ற இசை நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்திருந்தார்.

ஆனால், மழை காரணமாக மைதானத்தில் மழை நீர் தேங்கியதால்   நடக்கவிருந்த இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

இதுகுறித்து, ஏ.ஆர்.ரஹ்மான் தன் டுவிட்டர் பக்கத்தில் விரைவில் இந்த நிகழ்ச்சி குறித்த புதிய தேதி அறிவிக்கப்படும் என்று கூறினார்.

அதன்படி, இன்று கிழக்கு கடற்கரை சாலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி  நடக்கவுள்ளதால் அப்பகுதியில் கூடுதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் தங்கள் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளும்படி டிராபிக் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். 

இந்த டிராபிக் நெரிசலை தவிர்க்க, ஓஎம்ஆர் சாலையை பயன்படுத்தும்படி போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.