திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : வெள்ளி, 4 ஜூன் 2021 (19:31 IST)

24 வருடங்களுக்கு முன் ஏ.ஆர்.முருகதாஸ் நடித்த படம்: வீடியோ வைரல்!

பிரபல இயக்குனருக்கு ஏஆர் முருகதாஸ் இயக்கிய முதல் திரைப்படம் தீனா என்பதும் அஜித் நடித்த இந்த திரைப்படம் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதற்கு  அதாவது 1997 ஆம் வருடமே அவர் ஒரு படத்தில் நடித்து உள்ளதாக தெரிவித்து அதன் வீடியோவையும் வெளியிட்டு உள்ளார் 
 
கடந்த 1997ஆம் ஆண்டு சிம்ரன் அப்பாஸ் நடித்த திரைப்படம் பூச்சூடவா. இந்த படத்தில் ஒரு காட்சியில் தான் நடித்து இருப்பதாகவும் அது மட்டுமின்றி இந்த படத்தில்தான் வசனமும் எழுதி இருப்பதாகவும் ஏ ஆர் முருகதாஸ் அவர்கள் குறிப்பிட்டுளளார்.
 
ஏ.ஆர். முருகதாஸ் தோன்றும் இந்த படத்தில் சர்வராக நடித்துள்ளதன் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. ஏற்கனவே ஆர் முருகதாஸ் தான் இயக்கும் அனைத்து திரைப் படங்களிலும் ஒரே ஒரு காட்சியில் தோன்றுவார் என்பது அனைவரும் அறிந்ததே