1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Sasi)
Last Modified: புதன், 26 ஜூலை 2017 (16:41 IST)

“எதுவா இருந்தாலும் யோசிச்சு முடிவெடுங்க” – கமலுக்கு ஆர்டர் போட்ட நடிகை

‘அரசியலுக்கு வருவது குறித்து நன்கு யோசித்து முடிவெடுங்கள்’ என கமல் மற்றும் ரஜினிக்கு ஆர்டர் போட்டுள்ளார் நடிகை  கெளதமி.


 
 
ரஜினியை அரசியலில் குதிக்கச் சொல்லி பல வருடங்களாக பல்வேறு தரப்பினரும் கெஞ்சிவரும் நிலையில், கமலின் கருத்துகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன. போர் வருமென ரஜினி காத்திருக்க, போரை உருவாக்கி வருகிறார் கமல்.
 
இதுகுறித்து கெளதமியிடம் கேட்டபோது, “நல்ல விஷயங்கள் இருக்கும் இடத்தில், கெட்ட விஷயங்களும் இருக்கும். கமல் சொல்லும் கருத்துகள், அவருடைய சொந்த கருத்துகள். அதில் யாரும் தலையிட முடியாது. அதேபோல், அவர் அரசியலுக்கு  வருவதையும் யாரும் தடுக்க முடியாது. ஆனால், அரசியலுக்கு வருபவர்கள் என்ன காரணத்துக்காக வருகிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு, குடிமகளாகிய எனக்கு இருக்கிறது. எனவே, ரஜினி, கமல் யாராக இருந்தாலும் சரி… நன்கு யோசித்து முடிவெடுங்கள்” என்று கூறியுள்ளார்.