வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 13 செப்டம்பர் 2020 (18:29 IST)

கர்ப்பமாக இருக்கும் அனுஷ்கா சர்மா… பிரபாஸ் படத்தில் சீதா வேடத்தில் நடிக்க பேச்சுவார்த்தையா?

பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் படத்தில் சீதா கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

ராமாயண கதையை மையமாகக் கொண்டு இந்தியாவின் பல மொழிகளில் ஆதிபுருஷ் என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகனாக பிரபாஸ் நடிக்க இருக்கிறார். 3 டியில் உருவாகும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் சாயிப் அலிகான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த படத்தில் சீதா கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்கா சர்மாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் அனுஷ்கா சர்மா இப்போது கர்ப்பமாக உள்ளதால் எப்படி நடிக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் படக்குழுவோ அனுஷ்கா சம்மந்தப்பட்ட காட்சிகளை அவர் பிரசவம் முடிந்து இரண்டு மாத ஓய்வுக்குப் பின்னரே எடுக்க உள்ளதாக சொல்கின்றனர்.