1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (18:22 IST)

தீவிர கிரிக்கெட் பயிற்சி பெற்று வரும் விராத் கோஹ்யின் மனைவி: காரணம் இதுதான்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராத் கோலியின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா தீவிர கிரிக்கெட் பயிற்சி பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
நடிகை அனுஷ்கா சர்மா விரைவில் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட திரைப்படம் ஒன்றில் நடிக்க திட்டமிட்டுள்ளார்
 
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜூலன் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகும் இந்த படத்தில் ஜூலன் கோஸ்வாமியின் கேரக்டரில் அனுஷ்கா சர்மா நடிக்க உள்ளார்
 
சக்டா எக்ஸ்பிரஸ் என்ற டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்திற்காகத்தான் அனுஷ்கா சர்மா தீவிரமாக கிரிக்கெட் பயிற்சி பெற்று வருவதாக கூறப்படுகிறது.