திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinojkiyan
Last Modified: வியாழன், 21 நவம்பர் 2019 (16:24 IST)

’தனுஷ் ’படத்தில் நடிக்க மறுத்த ’அனுஷ்கா ’: என்ன ரீசன் ?

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை அனுஷ்கா. இவர் தனுஷ் படத்தில் நடிக்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
தமிழ் நாவலாசிரியர் பூமணி எழுதியிருந்த வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு, இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷின் நடிப்பில் வெளியான படம் அசுரன். இப்படம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 100 கோடி ரூபாய் வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளது.
 
இப்படத்தினை மற்ற மொழிகளில்  எடுக்க பல நடிகர்கள் முயற்சி எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், அசுரன் படத்தை தெலுங்கு மொழியில் எடுப்பதற்க்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
 
இதில், தனுஷ் நடித்த கதாப்பாத்திரத்தில், பிரபல நடிகர் வெங்கடேஷ் நடிக்கிறார். மஞ்சுவாரிகள் கதாப்பாத்திரத்தில் நடிக்க, முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 
 
அதன்படி, நடிகை அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகிறது.