1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 4 மார்ச் 2021 (15:17 IST)

வீட்டில் வருமான வரிச்சோதனை…. அனுராக் காஷ்யப் வெளியிட்ட புகைப்படம்!

பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் அனுராக் காஷ்யப் வீட்டில் வருமான வரிச்சோதனை நிகழ்ந்து வரும் நிலையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகியுள்ளது.

நேற்று நடிகை டாப்ஸி மற்றும் இயக்குனர் அனுராக் காஷ்யப் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். இன்றும் அந்த சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. இருவருமே தொடர்ந்து பாஜகவை விமர்சித்து வந்த நிலையில் இருவர் வீடுகளிலும் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இநிலையில் அனுராக் தன்னுடைய வீட்டில் உள்ள புத்தகங்கள் மற்றும் திரைப்பட சிடிக்கள் அடங்கிய நூலகத்தின் முன் நின்று எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் இவைதான் என்னுடைய சொத்துகள் என்பதை அவர் சொல்கிறார் என ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக அந்த புகைப்படத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.