1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 20 ஜனவரி 2022 (22:24 IST)

முத்த காட்சிக்கு சொத்த எழுதி கேப்பா போல... ஹாட் டாப்பிக்கான அனுபமா!!

முத்த காட்சியில் நடிக்க நடிகை அனுபமா பரமேஸ்வரன் ரூ.50 லட்சம் கூடுதலாக வாங்கியதாக கூறப்படுகிறது. 

 
2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இவர் தற்போது மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 
 
இந்நிலையில் தெலுங்கில் அவர் ஆஷிஷ் ரெட்டியுடன் நடித்துள்ள ரவுடி பாய்ஸ் படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் கதாநாயகனுடன் அவர் நடித்துள்ள லிப் லாக் காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது. அதிக கவர்ச்சி காட்டுவது, முத்த காட்சி போன்றவற்றில் நடிக்க இதுவரை மறுத்து வந்த அனுபமா பரமேஸ்வரன். தற்போது இந்த முத்த காட்சியில் நடித்து உள்ளார். 
 
இந்த முத்த காட்சிக்காக அவர் ரூ.50 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. முதலில் இதில் நடிக்க மறுத்த அவர் ரூ.50 லட்சம் தருவதாக சொன்னதும் ஒப்புக்கொண்டார் எனவும் கூறப்படுகிறது.