வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 18 அக்டோபர் 2018 (19:18 IST)

ஜெயம் ரவியின் 'அடங்க மறு' ரிலீஸ் குறித்து அறிவிப்பு

`டிக் டிக் டிக்' படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடித்து வரும் படம் ‘அடங்க மறு’. கார்த்திக் தங்வேல் இயக்கி உள்ளார். இந்த படத்தில் ஜெயம் ரவி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.  அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார்

சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  'அடங்க மறு’ படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார்.

இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏற்கனவே பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில், அடங்க மறு படம் வருகிற நவம்பர் மாதம் ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.