ஞாயிறு, 6 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 5 நவம்பர் 2021 (10:05 IST)

அண்ணாத்த பார்த்து தூங்கிய ரசிகர்… படம் முடிந்தும் எழாமல் அலப்பறை!

ரஜினியின் அண்ணாத்த மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இதையடுத்து சமூகவலைதளங்களில் ட்ரோல்கள் ஆரம்பித்துள்ளன.

ரஜினிகாந்த் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் சொந்தமாக தாங்களே சில பல கார்ப்பரேட் நிறுவனங்களோடு இணைந்து படத்தை வெளியிடுகிறது. தீபாவளியை முன்னிட்டு நேற்று உலகம் முழுவதும் படம் வெளியாகியுள்ளது.

வழக்கமாக ரஜினி படத்துக்கு இருக்கும் வரவேற்பை விட கொஞ்சம் கம்மியாகவே இந்த படத்துக்கு இருந்தது. ஆனால் காலைக்காட்சி முழுவதும் ரஜினி ரசிகர்களால் நிரம்பியதால் படம் நன்றாக இருக்கிறது என்றே சொல்லப்பட்டது. ஆனால் அதற்கடுத்த காட்சிகளில் இருந்து மோசமான விமர்சனங்கள்  வர ஆரம்பித்தன. இதனால் இணையத்திலும் படத்தை ட்ரோல் செய்யும் மீம்ஸ்கள் பதிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் அண்ணாத்த படம் பார்க்க சென்ற ரசிகர் ஒருவர் பாதியிலேயே தூங்கி, படம் முடிந்தும் எழாமல் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.