ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 14 ஜூன் 2021 (15:33 IST)

அனிதா பிறந்தநாளை தடபுடலாக கொண்டாடிய கணவர் பிரபா - வீடியோ!

பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வரும் அனிதா சம்பத் சர்க்கார் படத்தில் செய்தி வாசிக்கும் காட்சி ஒன்றில் நடித்தார். அதன் பின்னர் காப்பான் உள்ளிட்ட பல படத்தில் நடித்திருந்தார்.
 
இதற்கிடையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தனது நீண்டநாள் காதலர் பிரபாகரன் என்பவரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வரும் பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக பங்கேற்றிருந்த அனிதா அதன் பிறகு நிறைய டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது அனிதாவின் பிறந்த நாளை கணவர் சிறப்பான சர்ப்ரைஸ்களுடன் கொண்டாடியுள்ளார். அந்த முழு வீடியோ இதோ..