Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

5 மாசமா அனிருத் தூங்கலையாம்... ஏன் தெரியுமா?

CM| Last Updated: வெள்ளி, 5 ஜனவரி 2018 (13:36 IST)
5 மாதமாக சின்னப்பையன் அனிருத் தூங்கவில்லை என இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’.

இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். அத்துடன், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், செந்தில், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் விக்னேஷ் சிவன், “இந்தப் படத்துக்காக கடந்த 5 மாதமாக சின்னப்பையன் அனிருத் தூங்கவேயில்லை. அதற்குப் பலனாக பின்னணி இசை மற்றும் பாடல்கள் என எல்லாமே அருமையாக வந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :