திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 3 டிசம்பர் 2021 (10:59 IST)

ரஞ்சித் விக்ரம் படத்துக்கு அனிருத் இசையா?

பா ரஞ்சித் மற்றும் விக்ரம் இணையும் படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

இயக்குனர் பா ரஞ்சித் மற்றும் விக்ரம் கூட்டணி குறித்து கடந்த சில வருடங்களாகவே பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை கே ஈ ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்துக்கு இசையமைப்பாளராக இப்போது அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. வழக்கமாக ரஞ்சித் படங்களுக்கு சந்தோஷ் நாராயணன்தான் இசையமைப்பார். ஆனால் நட்சத்திரம் நகர்கிறது படத்துக்கு இந்த கூட்டணி பிரிந்தது. இந்நிலையில் இப்போது விக்ரம் பட்த்துக்கு புதிதாக அனிருத் இசையமைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.