செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 3 ஜனவரி 2019 (11:13 IST)

சிம்புவுக்கு உதவிய அனிருத்..!

முதன்முறையாக  சிம்பு நடிக்கும் புதிய படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. 


 
சீமான் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படமொன்று பேச்சுவார்த்தையில் இருக்கிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
 
இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் வந்தா ராஜாவா தான் வருவேன் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு எனும் படத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் 3ம் தேதி, அதாவது சிம்புவின் பிறந்தநாளில் தொடங்குகிறது. அரசியல் குறித்த படமான இதற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 
 
'மாநாடு' படத்தைத் தொடர்ந்து சீமான் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் சிம்பு. 
 
இதனை சீமான் ஒரு பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார். இப்படத்துக்கு அனிருத் இசையமைப்பார் என்று தகவல் வெளியாகவுள்ளது. ஆனால், அனிருத் இசையமைப்பாளர் என்பதை சீமான் உறுதிப்படுத்தவில்லை. ஒருவேளை இது உண்மையெனில் சிம்பு படத்திற்கு அனிருத் இசையமைக்கும் முதல் படமாக இது இருக்கும் என்பது கூடுதல் தகவல் .
 
சீமான் - சிம்பு இணையும் இப்படத்தின் தயாரிப்பாளர் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என தெரிகிறது. 
 
அண்மைக்காலமாக தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த  சீமான்,  சிம்பு படத்தின் மூலமாக தற்போது இயக்குனர் அவதாரத்தை மீண்டும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.