ஒரே ஒரு... கோகோ படத்தின் 3 ஆம் பாடல் இன்று ரிலீஸ்!

Last Updated: வியாழன், 14 ஜூன் 2018 (18:56 IST)
கோலிவுட்டில் கொடி கட்டிபறந்து வரும் நடிகை நயன்தாரா. இவர் இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோலமாவு கோகிலா, விஸ்வாசம் ஆகிய படங்கள் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். 
 
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் கமிட்டாகி இருக்கிறார். இந்நிலையில், கோலமாவு கோகிலா படத்தின் மூன்றாவது பாடல் இன்று 7 மணிக்கு வெளியாகயுள்ளது.  
 
நெல்சன் இயக்கும் இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 6 பாடல்களுக்கும் அனிருத் இசையமைத்து முடித்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
இந்த படத்தின் எதுவரையோ என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கல்யாண வயசு பாடல் சூப்பர் ஹிட்டானது. தற்போது மூன்றாவது படலாக ஒரே ஒரு... என்று தொடங்கும் பாடலை 7 மணிக்கு அனிருத் வெளியிட இருக்கிறார். இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுதி இருக்கிறார். 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :