திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 29 ஏப்ரல் 2020 (18:47 IST)

உங்களுக்கு பிடித்த பாடலை அனிருத்திடம் கேட்டு லைவாக ரசிக்க வேண்டுமா? முழு விவரம் இதோ!

குத்தாட்டம், காதல், காதல் தோல்வி,உள்ளிட்ட அனைத்து வகையான பாடல்களை கொடுத்து படத்தின் ஹீரோவுக்கு நிகராக பேமஸ் ஆன இசையமைப்பாளராக சிறந்து விளங்குகிறார் அனிருத். கடந்த 2012ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தின் மூலம் அறிமுகமான அனிருத் முதல் படத்தின் "கொலவெறி" பாடலிலேயே கொலவெறி ஹிட் அடித்து பேசப்படும் திறமைசாலியாக மாறினார்.

விஜய்யின் கத்தி தீம் ம்யூஸிக், அஜித் ரசிகர்களை ஆட்டம் போட வைத்த ஆலுமா டோலுமா, தலைவர் ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்த மரண மாஸ், சும்மா கிழி அதையடுத்து தற்போது விஜய்யின் மாஸ்டர் பட குட்டி ஸ்டோரி வரை தொட்டதெல்லாம் ஹிட் தான்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருக்கும் தனது ரசிகர்களுக்கு பிடித்த பாடல்களை லைவாக இசையமைத்து பாட இன்று அபினவ் முகுந்துடன் வருகிறார். இதை தொடர்ந்து நாளை யூடியூபில் பிரபல இசையமைப்பாளர்களுடன் லைவ்வில் ஹிட் பாடல்களை பாடுவதாக தெரிவித்து ட்வீட் செய்து ரசிகர்களை அலார்ட் செய்துள்ளார்.